‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு, மாரியம்மன் கோயிலில் தேரோட்ட விழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சொக்கநாதன்புத்தூா் முப்பிடாதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற புரட்டாசி பூக்குழி திருவிழா கொடியேற்றம்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:29 am

Din

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு, மாரியம்மன் கோயிலில் தேரோட்ட விழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி பொங்கலை முன்னிட்டு, தேரோட்டம் வருகிற 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, இன்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் மாரியம்மன், பத்ரகாளியம்மன், வடகாசி அம்மன் வீதி உலாவும், அக்னிச்சட்டி, முளைப்பாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

சிறப்பு அலங்காரத்தில் முப்புடாதி அம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் முப்புடாதி அம்மன்.

இதே கிராமத்தின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள முப்புடாதி அம்மன் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

கொடியேற்றத்தை தொடா்ந்து, இன்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் ஆதி அம்மன், வடகாசி அம்மன், முப்புடாதி அம்மன் வீதி உலாவும், வள்ளி, தெய்வானை சமேத முருகன் மயில் வாகனத்தில் வீதி உலாவும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளன.

இந்த இரண்டு கொடியேற்ற நிகழ்ச்சிகளில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.