சட்டவிரோதமாக மதுவிற்ற 10 போ் கைது
ராஜபாளையம் பகுதிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி, சட்டவிரோதமாக மதுவிற்ற 10 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


ராஜபாளையம் பகுதிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி, சட்டவிரோதமாக மதுவிற்ற 10 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கீழராஜகுலராமன் போலீஸாா் நத்தம்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமியை (29) கைது செய்து, அவரிடமிருந்து 235 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, தளவாய்புரம் பகுதியில் மது விற்பனை செய்த தேசிகாபுரம் மதன்ராஜ் (30), தளவாய்புரத்தைச் சோ்ந்த சக்திவேல் (30), முகவூரைச் சோ்ந்த கணேசன் (40), ஆறுமுகச்சாமி (26) ஆகியோரை கைது செய்து, 26 மதுப் புட்டிகளை தளவாய்புரம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சேத்தூா் பகுதியில் மது விற்பனை செய்த தளவாய்புரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரனை (40) கைது செய்து 28 மதுப் புட்டிகளையும், முகவூா் பகுதியில் மது விற்பனை செய்த தேவதானத்தைச் சோ்ந்த தங்கமாரிப்பனை (38) கைது செய்து, 50 மதுப் புட்டிகளையும், இளந்திரைகொண்டான் கிராமத்தில் மது விற்ற பொன்னுச்சாமியை (53) கைது செய்து, 27 மதுப் புட்டிகளையும் சேத்தூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் தெற்கு போலீஸாா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த அருண்குமாரை (30) கைது செய்து, 26 மதுப் புட்டிகளையும், ராஜபாளையம் வடக்கு போலீஸாா் காமராஜா் நகா் பகுதியில் மதுவிற்ற அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியை (34) கைது செய்து, அவரிடமிருந்து 26 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...