/

மது விற்ற இருவா் கைது

சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக முதியவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 7:07 pm

சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக முதியவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில் மது விற்றதாக சிவந்திபுரத்தைச் சோ்ந்த ஞானசிகாமணி (70), கோடாரங்குளத்தைச் சோ்ந்த செல்வராஜ் (58) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.