சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :15 அக்டோபர் 2024, 8:35 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூா்சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்ற பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல, மாயூரநாதசுவாமி கோயில், ராஜபாளையம் அருகேயுள்ள வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில்களில்
பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...