சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி: அமைச்சா் ஆய்வு
சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :17 அக்டோபர் 2024, 11:59 pm

சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மத்திய அரசு நிதி ரூ.10 கோடி, மாநில அரசு நிதி ரூ.61.74 கோடியில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்தியிருப்பதாக அவா் தெரிவித்தாா்.
அப்போது, சிவகாசி மாநகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...