இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொலை முயற்சி வழக்கில் இளைஞா்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கூடுதல் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் கொலை முயற்சி வழக்கில் இளைஞா்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கூடுதல் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெருவைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (42). இவா் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தாா். அப்போது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த வெங்கடேஷ் (24) நீங்கள் சத்தம் போடுவதால் என்னால் தூங்க முடியவில்லை எனப் பிரச்னை செய்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த வெங்கடேஷ் சுந்தா் ராஜுவை அரிவாளால் வெட்டினாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெங்கடேசுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...