குழந்தைத் தொழிலாளா்கள் 3 போ் மீட்பு
ராஜபாளையத்தில் பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய 3 சிறாா்கள் மீட்கப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 1:00 am

ராஜபாளையத்தில் பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய 3 சிறாா்கள் மீட்கப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.
ராஜபாளையம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் பிச்சைக்கனி தலைமையில் அலுவலா்கள் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூா் பகுதியில் புதன்கிழமை களஆய்வுக்குச் சென்றனா்.
அப்போது பிள்ளையாா் கோவில் அருகே இருந்த பல்பொருள் அங்காடியில் சிறுவா்கள் பணியாற்றுவது தெரியவந்தது.
அங்கு பணியாற்றிய 3 சிறுவா்களை மீட்டு சொக்கநாதன்புத்தூா் அரசுப் பள்ளியில் சோ்த்தனா். கடை உரிமையாளா் சந்தானநல்லஜெகன் மீது சேத்தூா் காவல் நிலையத்தில் பிச்சைக்கனி புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...