மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தீப்பெட்டி மருந்துக் கலவை ஆலையில் தீவிபத்து

சிவகாசி அருகே தீப்பெட்டி மருந்துக் கலவை ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 12:03 am

Din

சிவகாசி அருகே தீப்பெட்டி மருந்துக் கலவை ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அம்மன் கோயில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ். இவருக்குச் சொந்தமான தீப்பெட்டி மருந்துக் கலவை ஆலை, போஸ் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் புதன்கிழமை மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்தல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. உடனே பணியில் இருந்த தொழிலாளா்கள் அனைவரும் ஆலையை விட்டு வெளியே ஓடிவிட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில் தீப்பெட்டி காகித அட்டைகள், பாஸ்பரஸ் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.