மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட 3 மூட்டை புகையிலைப் பொருள்களை சிவகாசி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 12:02 am

Din

அரசால் தடை செய்யப்பட்ட 3 மூட்டை புகையிலைப் பொருள்களை சிவகாசி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா்.

சிவகாசி திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகாசி கிழக்கு போலீஸாா் அந்தப் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் செல்வின் (52) என்பவரது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 3 மூட்டைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி சாலையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மாரீஸ்வரன் (27), சாமிபுரம் குடியிருப்பைச் சோ்ந்த ஆனந்த் (32) ஆகியோருக்கும் இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து, 3 மூட்டைகளில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

குட்கா கடத்திய இளைஞா் கைது: ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாரியம்மாள் தலைமையில் போலீஸாா் மதுரை சாலையில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.

அவா் கொண்டு வந்த சாக்கு மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, 48 கிலோ குட்கா, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்த பரமசிவம் மகன் முனீஸ்வரனை (28) கைது செய்தனா்.