நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

வேளாங்கண்ணி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :20 பிப்ரவரி 2026, 11:41 pm

வேளாங்கண்ணி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகை எஸ்பி கே.எஸ். பாலகிருஷ்ணனின் உத்தரவில் மாவட்ட முழுவதும் போலீஸாா் கஞ்சா, சாராயம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

அந்தவகையில், வேளாங்கண்ணி காவல் சாா்பு-ஆய்வாளருக்கு புகையிலை பொருள்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில், காருக்குள் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் பாா்மா் மாவட்டத்தைச் சோ்ந்த கான் பட்சிங் (29), ஜலூா் மாவட்டம் அா்ஜுன் சிங் (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 400 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவை பறிமுதல் செய்தனா்.