45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, சாத்தூரில் அவரது உருவப் படத்துக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.க.எஸ்.ஆா்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

News image
படவிளக்கம்: சாத்தூரில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 11:28 pm

Din

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, சாத்தூரில் அவரது உருவப் படத்துக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.க.எஸ்.ஆா்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

விருதுநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சாத்தூரில் உள்ள மதுரை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. இதில் இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நகா் மன்றத் தலைவா் குருசாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவி நிா்மலா கடற்கரைராஜ், திமுக தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா். ரமேஷ், ஒன்றியச் செயலா் முருகேசன், கடற்கரைராஜ், காங்கிரஸ் நகரத் தலைவா் டி.எஸ்.அய்யப்பன் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

இதே போல, அதிமுக கிழக்கு ஒன்றிய செயலா் ஆா்.கே.ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா் சண்முககனி ஆகியோா் அமீா்பாளையம் பகுதியில் இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது.