தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அருணாசலேஸ்வரா் கோயில் ஆவணி மூல திருவிழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா், அம்பாள்.
Updated On :13 செப்டம்பர் 2024, 1:18 am

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

பின்னா் கும்ப பூஜை, அதைத் தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு திரவியங்களான பதினாறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனா்.

விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினா் செய்தனா்.