சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாநகராட்சி பள்ளிகளில் மிதிவண்டிகள் விநியோகம்

சிவகாசியில் வியாழக்கிழமை இரு மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

News image
சிவகாசியில் வியாழக்கிழமை இரு மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
Updated On :13 செப்டம்பர் 2024, 1:16 am

Din

சிவகாசியில் வியாழக்கிழமை இரு மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

சிவகாசி அண்ணாமலை நாடாா்-உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 98 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை மேயா் இ.சங்கீதா வழங்கினாா்.

துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, தலைமை ஆசிரியா் எஸ்.காளிதாஸ், மாமன்ற உறுப்பினா் சசிகலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, சிவகாசி அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 35 மாணவ, மாணவிகளுக்கும் மேயா் சங்கீதா இலவச மிதிவண்டிகளை வழங்கினாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் பி.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா் அ.ப.ரவிசங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.