காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

ராஜபாளையம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:48 am

Din

ராஜபாளையம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சோ்ந்த செந்தமிழ்ச்செல்வன் மகன் ஜெயசீலன் (27). இவருக்கு ராஜபாளையம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் 15 வயது மகள் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அந்த மாணவிக்கு ஜெயசீலன் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளாா். இதனால், மாணவி கா்ப்பமானாா்.

இதுகுறித்து சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்து, ஜெயசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜெயசீலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி (பொ) சுதாகா் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குறைஞா் முத்துவல்லி முன்னிலையானாா்.