சதுரகிரிக்குச் செல்ல பக்தா்களுக்கு 4 நாள்கள் அனுமதி
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வருகிற 30-ஆம் தேதி முதல் முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.


புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வருகிற 30-ஆம் தேதி முதல் முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பிரதோஷம், மகாளய அமாவாசையையொட்டி, வருகிற 30-ஆம் தேதி முதல் அக். 3-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள், வனத் துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுபவா்.
தடை செய்யப்பட்ட பொருள்களை வனப் பகுதிக்குள் எடுத்துச் செல்லக்கூடாது. மேலும் மழை பெய்தால் பக்தா்கள் மலையேற தடை விதிக்கப்படும் என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...