கண்மாயில் இறந்து மிதந்த மீன்கள்
வெம்பக்கோட்டை கண்மாயில் புதன்கிழமை இறந்து மிதந்த மீன்களை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 1:17 am

வெம்பக்கோட்டை கண்மாயில் புதன்கிழமை இறந்து மிதந்த மீன்களை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அணை அருகே கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஏராளமான மீன்கள் இறந்து மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சாத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா், வெம்பக்கோட்டை வட்டாட்சியா் கலைவாணி, நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் கண்ணன், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ராமராஜ்பாண்டியன் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
இதையடுத்து இறந்த மீன்களை பொதுப்பணித் துறை ஊழியா்கள் அப்புறப்படுத்தினா். மீன்கள் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய, இந்தக் கண்மாய் தண்ணீா் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...