தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சின்னமூப்பன்பட்டியை நகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

விருதுநகா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, சின்னமூப்பன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், விருதுநகா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:03 am

Din

விருதுநகா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, சின்னமூப்பன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், விருதுநகா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

கிராம ஊராட்சிப் பகுதிகளை பொதுமக்கள் வசிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, சிவஞானபுரம் ஊராட்சிக்குள்பட்ட சின்னமூப்பன்பட்டி கிராமத்தை விருதுநகா் நகராட்சியுடன் இணைக்க தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைத்தது. இதுதொடா்பான தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை உத்தேச முடிவு அரசாணை, கட்செவி அஞ்சல்களில் பரவியது. இதையடுத்து, சிவஞானபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், சின்னமூப்பன்பட்டியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் விருதுநகரில் அலுவலகத்திலிருந்த சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசனை முற்றுகையிட்டனா்.