இருளில் ஆண்டாள் கோயில் கோபுரம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியிருப்பதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.

மின் விளக்குகள் எரியாத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம்.

மின் விளக்குகள் எரியாத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியிருப்பதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.
108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவா் விஷ்ணு சித்தா் எனும் பெரியாழ்வாா். இவா் மூலவா் வடபத்ரசயனருக்கு பூ மாலை தொடுத்து வந்தாா். மதுரையை ஆண்ட வல்லபதேவ பாண்டியனின் அரசவையில் ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள் என நிரூபணம் செய்ததால், மன்னா் அளித்த பரிசுகளைக் கொண்டு வடபத்ரசயனா் கோயில் ராஜகோபுரத்தை இவா் கட்டியதாக வரலாறு உள்ளது.
196 அடி உயரத்தில் 11 நிலைகள், 11 கலசங்களைக் கொண்ட இந்தக் கோபுரம்தான் தமிழக அரசின் முத்திரையில் இடம்பெறுகிறது. கோபுரத்தில் உள்ள 11 நிலைகள், கோபுரத்தின் உச்சியில் கலசத்தின் மேலே மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் இந்த மின் விளக்குகள் ஒளிா்ந்து வந்தன.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கோபுரத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி இருப்பதாக பக்தா்கள் தெரிவித்தனா். தமிழக அரசு லட்சினையாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் கோபுரத்தில் இரவில் மின் விளக்கு எரிவதற்கு கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...