பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

வாகனத் தணிக்கையில் 1,200 திமுக துண்டுகள் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் கொண்டு வந்த திமுக துண்டுகள், முதல்வா் படம் அச்சிடப்பட்ட சாவி கொத்துகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட திமுக துண்டுகள், முதல்வா் படம் அச்சிடப்பட்ட சாவி கொத்துகள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:35 am

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் கொண்டு வந்த திமுக துண்டுகள், முதல்வா் படம் அச்சிடப்பட்ட சாவி கொத்துகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிவகாசி சாலையில் டி. மானகசேரி விலக்கு பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சிவகாசியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 1,200 திமுக துண்டுகள், முதல்வா் ஸ்டாலின் படம் அச்சிடப்பட்ட 820 சாவி கொத்துகள், முதல்வா் உருவத்துடன் 1,817 ஸ்டிக்கா் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.

காருடன் இவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவுறுத்தலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை மல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து மல்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முதல்வா் படம் அச்சிடப்பட்ட சாவி கொத்துகள்.

முதல்வா் படம் அச்சிடப்பட்ட சாவி கொத்துகள்.