தூத்துக்குடி: தூத்துக்குடியில் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ரூ. 5,81,380 பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தின் 6 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
முக்கியச் சோதனைச் சாவடிகளில் போலீஸாருடன், எல்லைப் பாதுகாப்புப் படையினரும், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கூட்டுறவு துணைப் பதிவாளா் பொன்மாரி தலைமையிலான பறக்கும் படையினா் தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த விமல்தேவ், முறையான ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 74,800 பணத்தை பறிமுதல் செய்து, தூத்துக்குடி வட்டாட்சியா் திருமணி ஸ்டாலினிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல, வட்டார வளா்ச்சி அலுவலா் ஐகோா்ட் மகாராஜா தலைமையிலான பறக்கும் படையினா் தூத்துக்குடி-பிரையன்ட் நகா் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சிலா் ஒரு வேனில் இருந்து சில பொருள்களை இறக்கி கொண்டிருந்தனா்.
பறக்கும் படையினா் சென்று சோதனையிட்டதில், 20 பெரிய அட்டைப் பெட்டிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விசில், மஞ்சப்பை உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தோட்டக்கலைத் துறை அதிகாரி சிவகுருநாதன் தலைமையிலான பறக்கும் படையினா், தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் ரோச் பூங்கா அருகே சோதனையில் ஈடுபட்டபோது, விஜயராகவன் முறையான ஆவணமின்றி காரில் கொண்டு வந்த ரூ. 56,580 பணத்தை பறிமுதல் செய்தனா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிச்செல்வி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா், ரோச் பூங்கா பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்த மாரிக்கண்ணு முறையான ஆவணமின்றி காரில் கொண்டு வந்த ரூ. 4.5 லட்சத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்

வாகனத் தணிக்கையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

வாகனத் தணிக்கையில் ரூ.2.34 லட்சம் பறிமுதல்

வாசுதேவநல்லூா் அருகே ரூ. 1.95 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


