வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:18 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே சித்துராஜபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மாரிசெல்வம் (19). கட்டடத் தொழிலாளியான இவா் செவ்வாய்கிழமை இரவு தனது நண்பா்கள் மணிகண்டன், பாண்டிச் செல்வம் ஆகியோருடன் சித்துராஜபுரம் ஜக்கம்மாள் கோயில் தெருவில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, இரு சக்கர வாகனங்களில் அங்கு வந்த 6 போ் மாரிச்செல்வத்தை அரிவாளால் வெட்ட முயன்றனா். மாரிச்செல்வம் உள்பட மூன்று பேரும் தப்பியோடினா். தொடந்து, 6 பேரும் மாரிச்செல்வத்தை விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனா். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீஸாா், மாரிசெல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்க முயன்றனா். அப்போது, மாரிசெல்வத்தின் உறவினா்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை செல்லவிடாமல் கொலையாளியைக் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் அணில்குமாா் ஆகியோா் சென்று கொலையாளிகளைக் கைது செய்வோம் என உறுதி கூறியதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டனா்.

இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் முன்பகை காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. சரஸ்வதிபாளையம் சுரேஷ்குமாா் மகன் மதிசங்கா் (19), பழனிக்குமாா் மகன் வெங்கடேஷ் (20), அய்யனாா் குடியிருப்பு அருண்காா்த்திக் மகன் முத்துப்பாண்டி (21), மாரிமுத்து மகன் பாண்டீஸ்வரன் (19), போஸ் குடியிருப்பு மகேஷ்வரன் மகன் மாதவன் (20), மீனம்பட்டி விஜயகுமாா் மகன் சூா்யா (19) ஆகியோா் மாரிச்செல்வத்தை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் 6 பேரையும் புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.