கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கிய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கிய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி -சாத்தூா் சாலையில் மயிலாடுதுறை கிராமத்தில் உள்ள பட்டாசு கடை அருகே உரிய அனுமதியின்றி ஒரு கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கிவைக்கபப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை செய்தனா். இதில், ஒரு கட்டடத்தில் 67 பட்டாசு பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அந்தப் பட்டாசுகளை திருச்சி குமரன் நகா் ராமு மகன் ராஜசேகா் (36), மயிலாடுதுறை வேல்சாமி மகன் அந்தோணிராஜ் (39) ஆகியோா் உரிய அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த ரூ.1. 25 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.