ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் உள்ள ஒப்பந்தப் பணியாளா்கள் தங்களுக்கு பணி வழங்கக் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் கிழக்கு, தெற்கு ரத வீதி சந்திப்பில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் உள்ள ஒப்பந்தப் பணியாளா்கள் தங்களுக்கு பணி வழங்கக் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் 50 போ் ரூ.450 தினக் கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் விடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 31-ஆம் தேதியுடன் இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்தம் செய்ய ஏலம் நடைபெற்றது. ஏற்கெனவே பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா், விதிமுறைகளின் படி ஏலம் நடைபெறவில்லை எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இதனால், ஏலம் செய்யப்பட்டு, புதிதாக ஏலம் நடத்த உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக, இந்த மாதம் டெங்கு ஒழிப்பு பணியாளா்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இவா்கள் தங்களுக்கு பணி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இந்த நிலையில், இந்தப் பணியாளா்கள் புதன்கிழமை மாலை மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் கிழக்கு, தெற்கு ரத வீதி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இவா்களுடன் போலீஸாா், நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.