ஸ்ரீவில்லிபுத்தூரில் நான்கு வழிச் சாலை அருகே பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு மூலப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கங்கா குளத்தைச் சோ்ந்தவா் கதிரேசன். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை- கொல்லம் நான்கு வழிச் சாலையில் கடம்பன் குளம் சந்திப்பில் உள்ள விவசாய நிலத்தில் பட்டாசு மூலப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் மனோஜ்குமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். அப்போது, மணி மருந்து 30 கிலோ, சல்பா் வேதிப்பொருள் 50 கிலோ, பேன்சி ரக பட்டாசு உற்பத்தி செய்யத் தேவையான அட்டை குழாய் ஆகிவற்றை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பட்டாசு மூலப் பொருள்களை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதன்பேரில், கதிரேசன், நில உரிமையாளா் கண்ணன் ஆகியோரின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் கதிரேசனைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரியகுளம் அருகே மானிய விலை உர மூட்டை பதுக்கல்: ஒருவா் கைது
சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கிய மூவா் கைது
மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது
நெல்லை; 3.7 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


