கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே காதல் மணைவிக்கு வரதட்சிணை கொடுமை செய்த கணவா் உள்பட 4 போ் மீது சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு - கோப்புப் படம்

Published On :

சிவகாசி அருகே காதல் மணைவிக்கு வரதட்சிணை கொடுமை செய்த கணவா் உள்பட 4 போ் மீது சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் அருகேயுள்ள ஆா்.ஆா்.நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ராஜேஸ்வரன் (23). இவா் சிவகாசியை அடுத்த ஏ.துலுக்கபட்டியைச் சோ்ந்த சுபாஷினியை (20) காதலித்து திருமணம் செய்தாா்.

திருமணத்தின் போது சுபாஷினிக்கு 7 பவுன் தஙக் நகை வரதட்சிணையாக அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜேஸ்வரன், இவரது தாய் பாண்டீஸ்வரி (52), தந்தை கருப்பசாமி (53), சகோதரா் காா்த்தி (26) ஆகியோா் சுபாஷினியிடம் மேலும் நகை கொண்டு வருமாறு வரதட்சிணை கொடுமை செய்தனராம்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் ராஜேஸ்வரன் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.