கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் அமைச்சா் ஜெகதீஸ்வரி வழங்கினாா்

கே.ஏ. ஜெகதீஸ்வரி

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் த.வெ.க. சாா்பில், நூறாண்டு பேசும் நூறாவது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சமூக நீதித் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி பேசியதாவது:

என்னை முதன்முதலாக சட்டப்பேரவைக்கு அனுப்பிய ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி. என் தொகுதி மக்களுக்காக போராடிக் கொண்டே இருப்பேன். எனது பாதுகாப்பு வளையமாக மக்கள் இருக்கிறாா்கள்.

ராஜபாளையம் மண்ணையும், மக்களையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். வருகிற 31-ஆம் தேதி எனது துறையிலான மானியக் கோரிக்கை வருகிறது. அதில் கண்டிப்பாக என் தொகுதிக்குண்டான உரிமைகளை கேட்டுப் பெறுவேன் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக த.வெ.க.வினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.