ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இடையன்குளம் ஊராட்சியில் பட்டா நிலத்தில் கழிவுநீா் தேங்கும் பிரச்னை தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், இடையன்குளம் ஊராட்சியில் சண்முக ஆசிரியா் தெருவில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி குழுவினருக்குச் சொந்தமான நஞ்சை பட்டா நிலத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கியது. இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு கடிதம் அளித்த கல்லூரி நிா்வாகம், பட்டா நிலத்தில் சுற்றுச் சுவா் கட்டியது. இதனால், அந்தத் தெருவில் உள்ள கழிவுநீா் செல்ல முடியாத நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சுவா் இடிக்கப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் இரு மாதங்களில் கழிவுநீா் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்படும். பட்டா நிலத்தில் கழிவு நீா் செல்லக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது

வேளச்சேரி மக்களின் வேதனைகள் தீா்க்கப்படுமா?

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் ஓடிய கழிவு நீா்

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் கழிவுநீா்: வியாபாரிகள், பொதுமக்கள் வேதனை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


