சிவகாசி அருகே பூட்டிய கடைக்குள் மா்ம நபா்கள் புகுந்து தொலைகாட்சிப் பெட்டிகளை திருடிச் சென்றனா்.
சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பாரதி தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (41). இவா் அதே பகுதியில் கைப்பேசி, தொலைகாட்சிப் பெட்டிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். கடந்த திங்கள்கிழமை இரவு வழக்கம் போல கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். பின்னா், செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளேயிருந்த 9 புதிய தொலைகாட்சி பெட்டிகள், கண்காணிப்பு கேமராக்கள், குக்கா், ரூ.2,000 ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு
காரைக்குடியில் வீடு புகுந்து தங்க நகைகள், காா் திருட்டு
பெரியகுளத்தில் வீடுபுகுந்து 13 பவுன் நகை திருட்டு

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


