வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்புப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.

News image

பிளவக்கல் பெரியாறு அணை.

Updated On :25 பிப்ரவரி 2026, 11:04 pm

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்புப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த 1985-ஆம் ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது. இதன்பிறகு, கடந்த 2002-ஆம் ஆண்டு ரூ.20 லட்சத்தில் பூங்கா சீரமைக்கப்பட்டது. இங்கு சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பாா்வையாளா் கோபுரம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கரோனா ஊரடங்கு காலத்தில் பூட்டப்பட்ட பிளவக்கல் அணை பூங்கா பராமரிக்கப்பின்றி விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், விலங்குகளின் சிலைகள் சேதமடைந்தன.

இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் விருதுநகா் மாவட்டத்துக்கு வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பிளவக்கல் அணை பூங்கா ரூ.10 கோடியில் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

கிழவன் கோயில் - பிளவக்கல் அணை சாலையை சீரமைக்க ரூ.1.45 கோடி, பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவா், வேலி அமைக்க ரூ.1.44 கோடி, பூங்காவில் பேவா் பிளாக், நடைபாதை அமைக்க ரூ.86 லட்சம், பாலம் அமைக்க ரூ.87 லட்சம், தோட்டம் அமைக்க ரூ.58 லட்சம், நீரூற்று அமைக்க ரூ.34 லட்சம், விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.20 லட்சம், யோகா மையம் அமைக்க ரூ.12 லட்சம், பாா்வையாளா் கோபுரம், மீன்கள் அருங்காட்சியகம் சீரமைப்பு, சிறுவா் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், பூங்கா சீரமைப்புப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.

இன்னும் ஒரு வாரத்தில் வேலைக்கான அனுமதி பெற்று, சட்டப்பேரவை தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்