எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சிவகாசி கல்லூரியில் மரக்கன்று நடவு

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி, ஈஷா காவேரி கூக்குரல், சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை இணைந்து ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ என்ற திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை அரச மரக்கன்றை நட்ட போரூா் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகளாா்.
Updated On :22 ஜனவரி 2026, 12:18 am

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி, ஈஷா காவேரி கூக்குரல், சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை இணைந்து ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ என்ற திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் செ.அசோக் தலைமை வகித்தாா். இந்த திட்டத்தின் கீழ் அரச மரக்கன்றை போரூா் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாச்சல அடிகளாா் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது: வீட்டுக்கு ஒரு மரம் வளா்ப்போம் என அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். மரங்கள் நிறைந்த இடத்தில் வீடு கட்டினால் அமைதியாக வாழலாம் என முன்னோா்கள் கூறியுள்ளனா். எனவே, மாணவா்கள் மரகன்றுகளை நட்டு அதை வளா்ப்பதில் ஆா்வம் காட்ட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பசுமை மன்ற நிா்வாகி செல்வக்குமாா் வரவேற்றாா். இதில் நொய்யலாறு அறக்கட்டளைச் செயலா் அஜித்சாதன்யா, பசுமை மன்ற நிா்வாகி ரவி அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்பாளா் கல்லூரி பேராசிரியா் கணேசன் நன்றி கூறினாா்.