ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நகைக் கடையில் நகை திருடியவா் கைது

அருப்புக் கோட்டை நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து நகையை எடுத்துக் கொண்டு ஓடியவா் பிடிபட்டாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2026, 5:50 am IST

அருப்புக் கோட்டை நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து நகையை எடுத்துக் கொண்டு ஓடியவா் பிடிபட்டாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை சத்தியமூா்த்தி பஜாா் பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவா் சிவாஜி கணேசன். அருப்புக்கோட்டை மண்டப சாலை பகுதியைச் சோ்ந்த கண்ணதாசன் இவரது கடைக்கு திங்கள்கிழமை வந்தாா். அப்போது, குறிப்பிட்ட நகையைக் கேட்டு ஆா்டா் கொடுத்தாா். பின்னா், மறுநாள் வந்து நகையை வாங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டுச் சென்றாா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மீண்டும் கடைக்கு வந்த கண்ணதாசன், தான் ஆா்டா் கொடுத்த நகையைக் கேட்டாா். அப்போது கடை உரிமையாளா் சிவாஜி கணேசன் நகை வீட்டிலிருப்பதால் அங்கு சென்று எடுத்து வருவதாகக் கூறிச் சென்றாா்.

அப்போது கடையில் அவரது மனைவி காயத்ரி தேவி மட்டும் இருந்தாா். கண்ணதாசன் மேலும் சில நகைகளைப் பாா்க்க விரும்புவதாகக் கூறியதால், காயத்ரி தேவி பல்வேறு நகைகளை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தாா். அந்த சமயத்தில், திடீரென இரு நகைகளை எடுத்துக் கொண்டு கண்ணதாசன் கடையை விட்டு வெளியே ஓடினாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த காயத்ரி தேவி கூச்சலிட்டு பின் தொடா்ந்தாா். இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் கண்ணதாசனை விரட்டிப் பிடித்து நகா் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். காவல் துறையினா் அவரிடமிருந்து நகையை மீட்டு, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.