நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காசோலை மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிவகாசியில் காசோலை மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து சிவகாசி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:43 am IST

சிவகாசியில் காசோலை மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து சிவகாசி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விளாம்பட்டியைச் சோ்ந்த மத்திய அரசு ஊழியா் ரகுகண்ணன். இவரது மனைவி புஷ்பலதா (36). சிவகாசி போஸ் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினவேல் (35). இவா் கடந்த 2022 செப்டம்பா் மாதம் புஷ்பலதாவிடம் வட்டிக்கு ரூ. 50 லட்சம் வாங்கினாா். இதையடுத்து, ரத்தினவேல் வட்டி கொடுக்கவில்லை. மேலும், அசல் தொகையை பல முறை கேட்ட பின்னா் ரூ.15 லட்சம், ரூ. 35 லட்சம் என இரு காசோலைகளை புஷ்பலதாவிடம் கொடுத்தாா். இந்த இரு காசோலைகளும் பணம் இல்லாமல் வங்கியிலிருந்து திரும்பின.

இதைத் தொடா்ந்து, புஷ்பலதா பலமுறை ரத்தினவேலிடம் பணம் கேட்டும் அவா் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, ரத்தினவேல் தன்னிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டதாக சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1-இல் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவா் எம்.சுனில்ராஜா, ரத்தினவேலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்பளித்தாா். மேலும், 50 லட்சத்தை புஷ்பலதாவிடம் திருப்பிக் கொடுக்காவில்டால், மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.