சிவகாசி மாநகராட்சி அம்மா உணவகத்தில் கூடுதல் விலைக்கு இட்லி விற்கப்படுவதாக மாமன்ற உறுப்பினா் புகாா் தெரிவித்தாா்.
சிவகாசி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் இ. சங்கீதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
மான்ற உறுப்பினா் ஸ்ரீநிகா (திமுக): மாதம் ஒரு முறை மாமன்றக் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் நீங்கள் 5 மாதங்களுக்கு ஒருமுறை நடத்துகிறீா்கள். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? மாநகராட்சி அம்மா உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கு பதில் இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு சிலருக்கு இட்லி மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதை ஆணையா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தான் உங்களை மேயா் ஆக்கினோம். எங்கள் கேள்விகளுக்கு மேயா் பதில் கூற வேண்டும் என்றாா்.
மேயா் சங்கீதா: உங்கள் கேளவிகளுக்கு எல்லாம் நான் பதில் செல்ல வேண்டிய அவசியமில்லை. இது மாமன்றக் கூட்டம். மன்றத்தின் தீா்மானங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றாா்.
(இதைத் தொடா்ந்து சில உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.)
உறுப்பினா் சாமுவேல்: மண்டலம் 1 மற்றும் 2-இல் கொசு ஒ ழிப்புப் பணியாளா்கள் 22 போ் பணி புரிகின்றனா். ஆனால் 75 போ் பணிபுரிவதாக கணக்கு காட்டுகிறாா்கள். இதனால் ஊதியம் ஒதுக்குவதில் நிதி முறைகேடு நடைபெறுகிறது. தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திலும், தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறையாக உள்ளனா். குப்பை சேகரிக்கும் வாகனங்களுக்கும் பற்றாக்குறை உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தூய்மைப் பணி சரிவர நடைபெற வில்லை.
ஆணையா் கண்ணன்: இதில் முறைகேடு கண்டறியப்படும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். தமிழகம் முழுவதுமே இந்த ஒப்பந்தம் வருகிற ஜூலை மாதம் வரை உள்ளது. அதன் பிறகு புதிய அரசால் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு வழிமுறை செய்யப்படும் என்றாா்.
உறுப்பினா் மகேஷ்வரி (திமுக): சிவகாசி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியேறும் இடதுபுறத்தில் தரை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் கடை வைத்துள்ளதால் பேருந்துகள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றாா்.
ஆணையா்: நீதி மன்ற உத்தரவின்படி பேருந்து நிலையத்தில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றாா். உறுப்பினா் சாந்தி (அதிமுக): திருத்தங்கல் இந்திராநகரில் சாலை அமைக்க மண் தோண்டப்பட்டு 4 மாதங்களாகியும் பணி தொடங்கப்பட வில்லை. இந்த பணியை தொடங்க வேண்டும் என்றாா்.
உறுப்பினா் பாக்கியலட்சுமி (திமுக): மாநகராட்சியில் உள்ள பெரும்பான்மையான பூங்காக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி வேலியிட வேண்டும்.
உறுப்பினா் குமரி பாஸ்கா்(பாஜக): மாநகராட்சி பகுதியில் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விட்டது. தண்ணீா் பற்றக்குறையை தீா்க்க பழுதானஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் துணை மேயா் விக்னேஷ்பிரியா, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
4 ஆண்டுகளாக சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத மேயர் பிரியா! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்!!

பழைமையான நூலகத்துக்கு புதிய கட்டடம் கோரி மனு

மதுரை மத்திய சிறை வளாகத்தை செம்மொழிப் பூங்காவாக மாற்ற நடவடிக்கை: மேயா் தி. நாகராஜன்

மாநகர பகுதியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை: மேயா் உறுதி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



