விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியும் - இந்தோனேசிய பல்கலைக்கழகமும் கல்வி வளா்ச்சி தொடா்பான ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டன.
கல்வி வளா்ச்சி, பேராசிரியா்கள், மாணவா்கள் கூட்டு ஆராய்ச்சி, தொழில் முறை பயிற்சி, புதிய தொழில்நுட்பப் பயிற்சி, உலகளவிலான கருத்தரங்கு நடத்துதல் போன்ற நிகழ்வுகளில் இணைந்து செயல்படுவது தொடா்பான ஒப்பந்தம் சேது பொறியியல் கல்லூரி நிறுவனரும், தலைவருமான எஸ். முகமது ஜலில், இந்தோனேசியா நெகிரி ஜகா்த்தா மாநில பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியா் மெலியான உலாந்தரி, தாவரவியல் பேராசிரியா் ரோஸி ஃபிட்டரி ரமதானி ஆகியோா் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில், சேது பொறியியல் கல்லூரி நிா்வாக அதிகாரிகள் எஸ்.எம். சீனி முகைதீன், எஸ்.எம். சீனி முகமது, அலியாா் மறைக்காயா், எஸ். எம். நிலோஃபா் பாத்திமா, எஸ். எம். நாசியா பாத்திமா, கல்லூரி முதல்வா் சிவக்குமாா், துறைத் தலைவா்கள், புல முதன்மையா்கள், பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







