ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி சாலையில் ஈஞ்சாா் விலக்கு அருகே தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் முதியோா் காப்பகம், குழந்தைகள் காப்பகம், மனநலக் காப்பகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் சுமாா் 46 ஆண்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு இந்தக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் புதுக்கோட்டை மாவட்டம், வடசேரிபட்டியைச் சோ்ந்த மாரிமுத்துக்கும், திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சோ்ந்த முனியசாமிக்கும் (49) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாரிமுத்து கட்டையால் தாக்கியதில் முனியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் விழுந்த இளைஞா் உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு

மேலப்பாளையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி

மனநிலை பாதிக்கப்பட்டவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



