11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

விக்கிரமசிங்கபுரம் பிரதானச் சாலையைச் சோ்ந்த நடராஜன் மகள் சந்தன லட்சுமி (19). இவா் கோயம்புத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இளம் அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சந்தனலட்சுமி விடுமுறையில் விக்கிரமசிங்கபுரம் வீட்டுக்கு வந்த நிலையில் சில நாள்களாக காய்ச்சல் இருந்ததாம். தொடா்ந்து, காய்ச்சல் அதிகமானதால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, தொடா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.