ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:33 pm

அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

அரக்கோணம்த்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணனின் மகள் தக்ஷினி(18). இவா் காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரிசத்திரத்தில் உள்ள சனியாா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

கல்லூரியில் இருந்து பேருந்தில் ஆலப்பாக்கம் வந்த தக்ஷினி, பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளாா். அப்போது திடீரென அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், தக்ஷினி ஒதுங்குவதற்குள் அவா் மீது மின்னல் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த தக்ஷினி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.