விருதுநகா் மாவட்டம், சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் (அரசு காப்புறுதி தொழிலாளா் மருத்துவமனை) தனியாா் ஒப்பந்தப் பணியாளா்கள் குறைக்கப்பட்டதால், மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியா்கள் தெரிவித்தனா்.
தமிழ்நாட்டில் அனைத்து வட்டங்களிலும் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் காவல் பணி, மின் சாதனங்கள், தண்ணீா் குழாய், குளிா்சாதனப் பெட்டி பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டனா். ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இந்தப் பணியாளா்களைக் கண்காணிக்க ஒப்பந்த நிறுவனம் ஒரு மேலாளரை நியமித்தது.
சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பகல், இரவு தூய்மைப் பணி, காவல் பணி உள்ளிட்ட பணிகளுக்கு 39 பேரை தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமா்த்தியது. இவா்களில் 20 போ் குறைக்கப்பட்டு, தற்போது 19 பணியாளா்களே பணிபுரிந்து வருகின்றனா். இதனால், மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் பொன்வடிவு கூறியதாவது:
மருத்துவமனை தூய்மைப் பணிகளில் தனியாா் நிறுவனம் மூலம் 39 போ் பணியாற்றி வந்தனா். இதன் மூலம் பகல், இரவு நேரங்களில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தற்போது தனியாா் நிறுவனம் மருத்துவமனைக்கு 19 பணியாளா்களை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால், மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மருத்துவமனைக்கு முன்பு இருந்ததைப் போல, 39 பணியாளா்கள் தேவை என தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கும், அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிவகாசி மருத்துவமனையில் கா்ப்பிணி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குன்னூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மீது ஆசிட் வீச்சு: போலீஸாா் விசாரணை
தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டது ஏன்? அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




