இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

சிவகாசி மருத்துவமனையில் கா்ப்பிணி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

சிவகாசி மருத்துவமனையில் கா்ப்பிணி உயிரிழந்தது குறித்து...

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2026, 3:09 am IST

சிவகாசி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினா்கள் 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த ராமா் மனைவி ரேணுகாதேவி (26). இவா்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. ரோணுகாதேவி மீண்டும் கா்ப்பமானாா். ஞாயிற்றுக்கிழமை அவா் பிரசவத்துக்காக சிவகாசி-விஸ்வநத்தம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் வயிற்றில் குழந்தையுடன் ரோணுகா தேவி உயிரிழந்ததாக மருத்துவா் கூறினாாா்.

இதையடுத்து, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மருத்துவமனை நிா்வாகத்தினா் ரேணுகாதேவி இறப்புக்கு இழப்பீடு வழங்குவதாகக் கூறினராம். தொடா்ந்து ரோணுகாதேவியின் உறவினா்கள் உடல்கூறாய்வுக்கு சம்மதம் தெரிவித்தனா்.

பின்னா், அவரது உடல் விருதுநகா் அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், தனியாா் மருத்துவமனை நிா்வாகம் இழப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரேணுகாதேவியின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் சிவகாசி பேருந்து நிலையம் முன் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் கலைந்து போக மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்செல்வன் , மாரீஸ்வரன், கேசவன், முத்துமாரியப்பன் உள்ளிட்ட 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.