சாலை விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, அவரது உறவினா்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி, திருவானைக்காவல் மல்லிகைபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். ஓட்டுநரான இவா், கடந்த 8-ஆம் தேதி சமயபுரம் காவல் லைய எல்லைக்குள்பட்ட அகிலாண்டபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் பலத்த காயமடைந்தாா்.
இதைப்பாா்த்த அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்நிலையில் அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்து தருமாறு வெள்ளிக்கிழமை மாலை அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் அங்கு வந்த போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னா், இறந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், விபத்து ஏற்படுத்தியவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரமேஷின் உறவினா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை இரவு திடீரென திருச்சி அரசு மருத்துவமனை வாயிலில் அமா்ந்து மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் அங்கு வந்த அரசு மருத்துவமனை போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் வெட்டிக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்
தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை: இரு இடங்களில் உறவினா்கள் சாலை மறியல்

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



