இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

News image

ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளப்பாடி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :21 ஜூன் 2026, 4:56 am IST

விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி, இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்த பெரியதள்ளப்பாடியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (20). இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இயற்கை உபாதைக்காக சாலை ஓரமாக நடந்து சென்றாா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த விமல்ராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்தை ஏற்படுத்திய விமல்ராஜ் மீது சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும், அவரை உடனடியாகக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சந்தோஷ்குமாரின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் அவரது உடலை வாங்க மறுத்து சிங்காரப்பேட்டை - திருப்பத்தூா் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.