ராஜபாளையம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் ஆனந்தகுமாா் (29). இவா் கிருஷ்ணாபுரம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக
கூறப்படுகிறது. இதனால், பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியே வசித்து வந்தாா்.
இந்த நிலையில், இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கதினா் தகவல் தெரிவித்தனா். உடனே உறவினா்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஆனந்தகுமாா் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

சேலம் கருப்பூா் அருகே தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்பு

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

