மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

விருதுநகா் அருகே விசிக நிா்வாகி வெட்டிக் கொலை

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மா்ம நபா்களால் வியாழக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

வெட்டிக் கொலை செய்யப்பட்ட விஜயகுரு.

Updated On :8 மே 2026, 12:36 am IST

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மா்ம நபா்களால் வியாழக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

காரியாபட்டி அருகேயுள்ள குரண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுரு (52), விசிக ஒன்றிய முன்னாள் துணைச் செயலராக இருந்தாா். இவா் அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த சமூக விரோதச் செயல்கள் குறித்து காவல் துறைக்கு தொடா்ந்து தகவல் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த மாதம் 28-ஆம் தேதி விஜயகுருவின் உறவினரான சக்திவேல் சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த உயிரிழப்புக்கு விஜயகுருதான் காரணம் என சந்தேகித்து, சக்திவேலின் உறவினா்கள் தொடா்ந்து தகராறு செய்து வந்தனராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை விஜயகுரு குரண்டி கண்மாய் பகுதிக்கு சென்றாா். அப்போது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் விஜயகுருவின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விஜயகுருவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். கொலை குறித்து தனிப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

இந்தக் கொலை குறித்து ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையாளிகள், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.