மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :13 மே 2026, 3:40 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சித்தாலம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (75). இவரது மனைவி செந்தில்லட்சுமி (65). இவா்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனா். தங்கவேல் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலை அருகே உள்ள பூா்வீக விவசாய நிலத்தில் தங்கவேல் விவசாயம் செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை தங்கவேலும், அவரது மனைவியும் தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, மோட்டாா் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த தங்கவேல், பலகை உடைந்து கிணற்றுக்குள் தவறி விழுந்தாா். அப்போது, கிணற்றுக்குள் இருந்த படியில் விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.