தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பொடுத்தப்பட்டி அருகேயுள்ள கொல்லஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் சிவகுமாா் (37). விவசாயி. இவா் தனது நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீா் அளவை பாா்க்க முடிவு செய்தாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை, அருகிலிருந்த தென்னை மரத்திலிருந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கியுள்ளாா்.
பாதி தொலைவு இறங்கிய நிலையில் கயிறு அறுந்துள்ளது. இதில் பக்கவாட்டு சுவரில் மோதி சிவகுமாா் கிணற்றில் விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரது அலறல் சப்தம் கேட்ட குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிவகுமாா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
அதன்பேரில் பாலக்கோடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







