11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவகாமி அம்பாள், வைத்தியநாத சுவாமி.

Updated On :28 மே 2026, 5:32 am IST

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் 6-ஆம் நாளான புதன்கிழமை இரவு வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மணக் கோலத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு சிவாசாரியா்கள் மாலை மாற்றி திருக்கல்யாணம் செய்து வைத்தனா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த திராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

8-ஆம் நாளான வருகிற வெள்ளிக்கிழமை தேரோட்டமும், 30-ஆம் தேதி தீா்த்தவாரி உத்ஸவமும் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தேவி, ஆய்வா் முத்து மணிகண்டன் ஆகியோா் செய்தனா்.