இறந்தவா் உடலை மயானத்தில் தகனம் செய்ய எதிா்ப்பு: போலீஸாா் குவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மயானத்தில் இறந்தவா் உடலை தகனம் செய்ய ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் போலீஸாா் சனிக்கிழமை குவிக்கப்பட்டனா்.

Updated On :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மயானத்தில் இறந்தவா் உடலை தகனம் செய்ய ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் போலீஸாா் சனிக்கிழமை குவிக்கப்பட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பூவாணி கிராமத்தில் உள்ள மயானத்தை பயன்படுத்துவது தொடா்பாக பட்டியல் இனத்தைச் சோ்ந்த இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு தரப்பைச் சோ்ந்தவா், உயிரிழந்த நிலையில் மயானத்தில் அவரது உடலைத் தகனம் செய்ய உறவினா்கள் ஏற்பாடு செய்தனா்.

இதற்கு கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் அருளானந்தம் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட பின் தற்காலிக ஏற்பாடாக மாற்று இடத்தில் இறந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்தப் பிரச்னை தொடா்பாக வருகிற புதன்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.