சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் புதன்கிழமை இரவு சிறுவன் உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் புதன்கிழமை இரவு சிறுவன் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி செலிம்புதோப்பு பழங்குடியினா் குடியிருப்பைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் சுவிந்திரன் (16). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பழங்குடியினா் குடியிருப்பில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 17- ஆம் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செண்பகத்தோப்புக்கு இரு சக்கர வாகனத்தில் சுவிந்திரன் சென்றாா். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த சுவிந்திரனை உறவினா்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவிந்திரன் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மம்சாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

