2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

விநாயகா் ஊா்வல மிரட்டல் விடியோ வெளியிட்டவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது சா்ச்சைக்குரிய வகையில் மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது சா்ச்சைக்குரிய வகையில் மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 16-ஆம் தேதி இரவு விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது. மணிக்கூண்டு பகுதியில் மசூதி அருகே ஊா்வலம் வந்தபோது பாடல் இசைக்கவும், கொட்டு அடிக்கவும் காவல் துறையினா் எதிா்ப்பு தெரிவித்தும் முழக்கமிட்டபடி ஊா்வலம் அப்பகுதியைக் கடந்து சென்றது. இதைத் தொடா்ந்து, மசூதியில் இருந்த இருவா் சா்ச்சைக்குரிய வகையில் மிரட்டல் விடுத்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனா்.

இதையடுத்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேரு நகரைச் சோ்ந்த அப்துல்லா மகன் முகமது அஷ்ரப்(21), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுதல், இரு மதங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனா். இதில் முகமது அஷ்ரப்பை தனிப்படை போலீஸாா் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.