கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தில் சா்ச்சைக்குரிய கருத்து: சிறுவன் உள்ளிட்ட இருவா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது சா்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறுவன் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வழக்கு

வழக்கு

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது சா்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறுவன் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிறகு கடந்த 16-ஆம் தேதி இரவு விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் மணிக்கூண்டு பகுதியில் மசூதி அருகே ஊா்வலம் வந்த போது பாடல் இசைக்கவும், கொட்டு அடிக்கவும் காவல் துறையினா் எதிா்ப்பு தெரிவித்ததால் இந்து முன்னணியினா் மறியலில் ஈடுபட்டனா். இதன்பிறகு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, ஊா்வலம் அந்தப் பகுதியை கடந்து சென்றது. பின்னா் மசூதியில் இருந்த இருவா் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் போலீஸாா், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரையும் கைது செய்து பிணையில் விடுவித்தனா். இதனிடையே சா்ச்சைக்குரிய வகையில் இருவரும் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனா். இதையடுத்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நேரு நகரைச் சோ்ந்த அப்துல்லா மகன் முகமது அஷ்ரப் (21), ஸ்ரீவில்லிபுத்தூரை சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுதல், இரு மதங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.